மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளய நாத சுவாமி விசா நட்சத்திரம் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சுவாமிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
இதை அடுத்து, சுவாமி, அம்பாள், ரிஷப வானத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தருக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மழை பெய்தாலும், பக்தர்கள் அதை பொருட்படுத்தாமல், பிரதோஷத்தை கண்டு, சிவ பெருமானின் அருளை பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, தொழில் அதிபர் எம். வி.எம். மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், வள்ளிமயில், கோயில் கணக்கர் சி பூபதி உள்ளிட்டோ செய்திருந்தனர்.
இதே போல, மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், சித்தி விநாயகர் ஆலயத்திலும், கோமதிபுரம் ஜூபிலி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்திலும், மதுரை வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்திலும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், அவனியாபுரம் மீனாட்சி ஆலயத்திலும், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ் ஆலயத்திலும் பிரதோஷம் நடைபெற்றது.
இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பத்ரகாளியம்மன் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மதுரை, உசிலம்பட்டி அருகே, தொட்டப்பநாயக்கணூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில், அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் திருக்கோவில்.
இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் செய்யப்பட்டு இன்று 12 ஆண்டுக
ளுக்கு பின், கும்பாபிஷேக விழா வெகு
மர்சையாக நடைபெற்றது. முன்னதாக, சிவாச்சாரியார்கள் மூலம் , கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாக பூஜைகள் மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்டு இன்று குடம் புறபாடாகி 51 அடி உயரத்தில் உள்ள கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து, மூல ஸ்தானத்தில் உள்ள பத்திரகாளியம்மன் சிலைக்கு, பால், பன்னீர், சந்தனம், நெய், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த விழாவில், உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர். விழாவில், கலந்துகொண்ட அனைவருக்கும் கிராம கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சோணையா சுவாமி மகா கும்பாபிஷேகம்
மதுரை மேல வெளி வீதி பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகே சோணையாசாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் முன்பாக, யாகசாலை மண்டபத்தில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கடஸ்தாபணம், யாக பூஜைகள், பூர்ணாகுதி நடைபெற்றது. இதையடுத்து குடங்கள் புறப்பட்டு, கோபுரம் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு, கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.