
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி விடுமுறை நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அறிவிக்கப்பட்ட ஏசி சிறப்பு ரயில் கடந்த வாரம் புதன் கிழமை வியாழன் அன்று இயங்கி பயணிகள் கூட்டம் இல்லாததால் தற்போது இந்த ரயில் புனலூர் மற்றும் கொல்லம் வழியாக கோட்டயம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் புதன் கிழமைக்கு பயணிகள் அதிகளவில் புக் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .இந்த சிறப்பு ரயிலை இந்த ஆண்டு முழுவதும் இயக்க கேரளா எம் பி கொடிக்குன்னில் சுரேஷ் வலியுறுத்தி யுள்ளார்.இந்த விடுமுறையில் மற்றும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ரயில் எண்: 06121 சென்னை சென்ட்ரல் – கோட்டயம் ஏசி சிறப்பு எக்ஸ்பிரஸ் (புதன்கிழமை)
சென்னை சென்ட்ரல் : 03:10 PM
தென்மலை : காலை 07:50 மணி
புனலூர் : காலை 08:45 மணி
கொட்டாரக்கரா : 09:12 AM
குந்தாரா : 09:29 AM
கொல்லம் : 09:55 AM
காயங்குளம் : காலை 10:50 மணி
மாவேலிக்கரை : காலை 11:05 மணி
செங்கனூர் : காலை 11:17 மணி
திருவல்லா : காலை 11:28 மணி
சங்கனாச்சேரி : 11:37 AM
கோட்டயம் : 12:05 PM

ரயில் எண்: 06122 கோட்டயம் – சென்னை சென்ட்ரல் ஏசி எக்ஸ்பிரஸ் (வியாழன்)
கோட்டயம் : 02:05 பி.எம்
சங்கனாச்சேரி : 02:22 PM
திருவல்லா : 02:32 PM
செங்கனூர் : 02:43 PM
மாவேலிக்கரை : 02:57 PM
காயங்குளம் : 03:08 PM
கொல்லம் : 04:30 PM
குந்தாரா : 04:58 PM
கொட்டாரக்கரா : 05:12 PM
புனலூர் : மாலை 05:45
தென்மலை : 06:31 PM
சென்னை சென்ட்ரல் : காலை 11:30 மணிக்கு சென்னை சென்றடையும்.





