
கரூரில் பிரச்சார கூட்டத்தில் “உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி
மதுரை மாவட்டம், தென்னிந்திய நடிகர் சங்கம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில், உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் , நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மற்றும் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள்
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
கரூரில் உயிரிழந்தோர் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி மதுரையில் அஞ்சலி
கரூரில் நேற்று அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், சோழவந்தான் தொழிலதிபர் ஆனந்தன் உட்பட பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக மற்றும் மத்திய அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இது மாதிரி சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிகழ்வில் கோரிக்கை வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.





