
ஐப்பசிமாத பூஜை க்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் வெள்ளிக்கிழமை மாலை நடை திறந்து மேல்சாந்தி தீபமேற்றி வைத்தார்.நாளை சனிக்கிழமை முதல் சபரிமலை ஐயப்பனுக்கு ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் துவங்கும்.சபரிமலை ஐய்யப்பன் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள மாளிகப்புரம் கோவிலில் புதிய மேல்சாந்தியாக பணியாற்றிட புதிய மேல்சாந்தி தேர்வு சனிக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது வேறு பூஜைகள் ஏதும் இன்றி பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு இரவு நடை அடைக்கப்படும் நாளை சனிக்கிழமை முதல் ஐப்பசி மாத பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு துவங்கி நடைபெறும் நெய்யபிஷேகம் படி பூஜை உட்பட பல்வேறு வழிபாடுகள் ஐயப்பனுக்கு விமர்சையாக நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மளிகை புரம் கோயில் மேல் சாந்தி பதவிக்காலம் ஒரு ஆண்டு ஆகும்.தற்போதைய மேல் சாந்தி பதவிக்காலம் அடுத்த மாதம் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 2025-26-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும்.சபரிமலை கோவிலில் உஷபூஜைக்கு பிறகு, புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கும் .
மேல்சாந்திக்கான போட்டியில் உள்ளவர்கள் மாளிகப்புரம் மேல்சாந்திக்கான போட்டியில் உள்ளவர்களின் பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதப்பட்டு சன்னிதானத்தில் வைத்து தந்திரி , மேல்சாந்தி ஆகியோர் முன்னிலையில் கோவில் பாரம்பரியப்படி குலுக்கல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
சபரிமலை, மாளிகைப்புரம் மேல் சாந்திகளை தேர்வு செய்யும் பந்தள மகாராஜா குடும்ப வாரிசுகளான இருகுழந்தைகளை பந்தளம் அரண்மனை அங்கீகரித்து அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மேல்சாந்திகளை தேர்ந்தெடுக்கும் இரு குழந்தைகளையும் அங்கீகரித்துப் பந்தளம் அரண்மனை அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் தேர்வாகும் மேல்சாந்திகள், நவம்பர் 16ம் தேதி பொறுப்பேற்று ஓராண்டுக்கு சன்னதிகளில் தங்கி பணியாற்ற உள்ளனர்.
தற்போது சபரிமலை மேல்சாந்தியாக கொல்லம் சக்திகுளங்கரையை சேர்ந்த அருண்குமார் நம்பூதிரியும், மாளிகப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் உள்ளனர்.இவர்களது பதவிக்காலம் வரும் நவ 16மண்டலபூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் மளிகை புரம் கோயில் நடை திறந்ததும் நிறைவடையும்.
பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், .காஷ்யப் வர்மா & மைதிலி கே வர்மா ஆகியோர் இன்று இருமுடி கட்டி சபரிமலை வந்தடைந்தனர்.அவர்களை தேவஸம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர்.
அக்டோபர் 18, சனிக்கிழமை சபரிமலை மற்றும் மாளிகாப்புரத்திற்கான மேல்சாந்திகளைத் தேர்ந்தெடுப்பதற்கான குடவோலை முறையில் இவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை, சபரிமலை – மாளிகாபுரம் கோயிலின் மேல்சாந்திக்கான சீட்டுப் போடுவதற்காக,
பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த காஷ்யப் வர்மா மற்றும்
மைதிலி கே வர்மா ஆகியோர் பந்தளம் அரண்மனை வலிய தம்புரான் திருவோணம் நாள் ராம வர்மா ராஜாவின் ஆசியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்கள் சபரிமலை வந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸின் அறிக்கையின் அடிப்படையில் குழந்தைகள் தேர்வுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
பந்தளம் அரண்மனை வலிய தம்புரான் மற்றும் வலிய தம்புராட்டி ஆகியோரின் ஆசிகளைப் பெற்ற பிறகு, அக்டோபர் 17 ஆம் தேதி நண்பகலில் பந்தளம் வலிய கோய்க்கல் கோயிலுக்குச் சென்ற பிறகு, குழு பிரதிநிதிகள் (துணைத் தலைவர் அருண் குமார், குழு உறுப்பினர் கேரளம் வர்மா) மற்றும் அவர்களது பெற்றோருடன் சன்னிதானத்திற்குப் புறப்பட்டு வந்தடைந்தனர்.





