
அமிர்தா பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் சார்பில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மை மற்றும் வறட்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நவ.14, 2026 சனிக்கிழமை அன்று, ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமிர்தா வேளாண் அறிவியல் கல்லுரி இறுதியாண்டு மாணவர்கள் கிணத்துக்கடவு, குலத்துப்பாளையம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மை மற்றும் வறட்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணலிலின் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் அபிஷேக், தேவநாராயணன், தேவப்ரியா, ஃபிசா, கார்த்திகேயன், நிரஞ்சனா, நிவேதா, பிரார்த்தனா, ரித்திகா, சாய் ரிதன்யா, சாண்ட்ரா மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் இணைந்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, மண் பாதுகாப்பு மற்றும் குறிப்பாக வறட்சிக் காலங்களில் நீர்வளங்களை நிலையான முறையில் மேலாண்மை செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மாணவர்கள் நீர்வடிப் பகுதி மேலாண்மை முறைகளான சம உயர வரப்புகள் அமைத்தல் , பண்ணைக் குட்டைகள் அமைத்தல் , தடுப்பணைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் குழிகள் போன்ற பல்வேறு முறைகளை விவசாயிகளுக்கு விளக்கினர். இம்முறைகள் மண் அரிப்பைக் குறைத்தல், நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்துதல் மற்றும் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதையும் எடுத்துரைத்தனர்.
மேலும், வறட்சியைச் சமாளிப்பதற்கான மேலாண்மை உத்திகளான வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களைப் பயிரிடுதல், நுண்ணீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்துதல், இலைவழி ஊட்டச்சத்து அளித்தல் மற்றும் பயிர்களுக்கு மூடாக்கு அமைத்தல் போன்ற நடைமுறைகளையும் மாணவர்கள் எடுத்துரைத்தனர். இம்முறைகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த உதவுவதையும் வலியுறுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம், நீர் கிடைப்பை மேம்படுத்துதல், மண்ணின் ஆரோக்கியத்தைப் பராமரித்தல், பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான வேளாண்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மை மற்றும் திறமையான வறட்சி மேலாண்மை முறைகளின் முக்கியத்துவத்தை மாணவர்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
Posts by Dhinasari Reporter:
- செந்தூரில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் அரோஹரா போட்ட வர்ணனையாளர் மீது புகார்!
- நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் இயக்க பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை!
- மதுரை நகைக்கடை கொள்ளைச் சம்பவம்; மாட்டிய யூட்யூபர், இன்ஸ்டா பிரபலங்கள்!
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
- நவீன வேளாண் முறைகள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு!



