நடிகர் கமல்ஹாசன் பகுத்தறிவு அரசியல் செய்து வருவதாக கூறி வரும் நிலையில் இன்று ரத யாத்திரை குறித்து ஒரு கருத்தை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு’ என்று கமல் கூறியுள்ளார்.
யாருக்கோ சாமரம் வீசுகிறது என்று கூறும் கமல், அந்த யாருக்கோ என்பவர் யார்? என்று கூற தைரியமில்லாமல் டுவீட் போட்டுள்ளார். மேலும் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களை மதியாமல் இருப்பவர்கள் போராட்டம் செய்பவர்கள்தான். அவர்களால்தான் பிரச்சனை என்பதை புரிந்து கொள்ளாமலும் அவரது டுவீட் உள்ளது.
மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜக மற்றும் இந்துமத எதிர்ப்பாளராக இருந்தாலும் இந்த ரத யாத்திரையை அனுமதித்து கேரள எல்லையை கடக்கும் வரை பாதுகாப்பு கொடுத்துள்ளார். இதுதான் உண்மையில் மத நல்லிணக்கம். இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறியபோது, ‘இதுக்குப்பேர்தான் மதசார்பற்ற அரசு. கேரளா முதலமைச்சர் கிட்ட இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி. இந்துக்கடவுளைக் கும்பிடறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்னு சொல்ற தைரியம் இருந்தா பாராட்டலாம் ‘என்று கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுக்குப்பேர்தான் மதசார்பற்ற அரசு. கேரளா முதலமைசர் கிட்ட இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி. இந்துக்கடவுளைக் கும்பிடறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்னு சொல்ற தைரியம் இருந்தா பாராட்டலாம். https://t.co/eE2YmUljh3
— S.VE.SHEKHER (@SVESHEKHER) March 20, 2018