கலை, அறிவியல், மருத்துவம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டி பத்ம விபூஷண் விருது 3 பேருக்கும், பத்ம பூஷண் விருது 9 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 73 பேருக்கும் வழங்கப்பட்டது. மொத்தம் 85 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மத்திய அரசு ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது. இப்போது பத்ம விபூஷண் விருது வழங்கி இருக்கிறது. ஜனாதிபதி மாளிகையில் விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டது
Popular Categories



