தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் நாளை தூத்துகுடி சென்று கலந்து கொள்ளவிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆனால் ரஜினி இதுகுறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லையே என்று நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சற்றுமுன்னர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:. ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது’ என்று கூறியுள்ளார்.



