இன்று நடைபெறவிருக்கும் சென்னை மற்றும் கொல்கத்தா போட்டியை நடத்தக்கூடாது என ஒருபுறம் ஒருசில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஒருவேளை அப்படி நடத்தினாலும் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், பார்வையாளர்கள் கருப்பு நிற சட்டை அணிந்தும் தங்கள் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிலர் கூறினர்.
ஆனால் தமிழர்களின் உணர்வை மதிக்காத ஐபிஎல் மற்றும் சேப்பாக்க மைதான நிர்வாகம், பல்வேறு கெடுபிடுகளை விதித்து, பார்வையாளர்களை சிறைக்கைதிகள் போல் நடத்துகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் பல மைதானத்திற்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டனர்.
ஒருசிலர் தாங்கள் வாங்கி வைத்திருந்த ஐபிஎல் டிக்கெட்டை எரித்து அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளனர். நம் தமிழ் இளைஞர்கள் எழுச்சி அடைந்துவிட்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது