குஜராத் ஆந்திர வங்கியில் 2654 கோடி கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாத முறைகேடு வழக்கில் குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சுரேஷ் நரைன் பட்நாகர், அமித் பட்நாகர், சுமித் பட்நாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குஜராத்தை சேர்ந்த டையமண்ட் பவர் இன்பிராஸ்டிரெக்ஸர் என்ற நிறுவனம் ஆந்திரா வங்கியில் 2,654 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது கடன் பெற்ற குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகை மற்றும் வட்டியை அந்த நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.பி.ஐ இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தது. இதில் நிறைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இவர்கள் வாங்கிய கடனில் இதுவரை ஒரு முறை கூட திருப்பி செலுத்தப்படவில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளை அமலாக்கத்துறை போலீஸ் தேடி வந்தது. இந்த நிலையில் தற்போது வதோதராவை சேர்ந்த சுரேஷ் நரைன் பட்நாகர், அமித் பட்நாகர், சுமித் பட்நாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறது. இவர்கள் அந்த நிறுவன முக்கியமான அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.