நெல்லை மாவட்டம் தென்காசியில் தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் அதிகமான் முத்து தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் டி.ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அப்போது மாநில தலைவர் அதிகமான் முத்து கூறியதாவது :தலைமை செயலகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறையில் உள்ளது போல் 3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களை பள்ளி கல்விதுறை நிர்வாக நலன் கருதி மாற்றுதல்கள் வழங்க வேண்டும்.
15-03-2018ம் ஆண்டில் உள்ளவாறு அனைத்து பணியிடங்களுக்கு பதவி உயர்வுக்கான தகுதி உள்ளவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பள்ளி கல்வி துறையில் அனுபவம் இல்லாத மண்டல கணக்கு அலுவலர் பணியிடத்தை பள்ளி கல்வி துறைக்கே வழங்கி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநராக நியமனம் செய்திட வேண்டும்.
பள்ளி கல்வித்துறை பல பிரிவுகளாக உள்ளதை இணைக்கும் போது அந்த பணிகளை அனைவரும் கண்காணிக்கவும், அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும். ஆகவே பள்ளி கல்வித்துறையோடு தொடக்க கல்வி துறையை இணைப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
பள்ளி கல்வித்துறை மண்டல கணக்கு அலுவலகங்களுக்கு கூடுதல் பணியிடங்கள் வழங்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் தங்களின் கோரிக்கைகள் ஏற்று தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு நடத்திட அனுமதி கேட்டுள்ளோம். பேச்சு வார்த்தைக்கு ஒரு மாதத்திற்குள் அழைக்காத பட்சத்தில் பள்ளி கல்வி துறை அலுவலகம் முன்பு மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் ஜஸ்டஸ் ஆபிரகாம் தேவசகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



