சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் மேல்தட்டு மக்களுக்கான கட்சி அல்ல. கிராம பஞ்சாயத்து நிதியை முறையாக படுத்தியிருந்தால் தமிழகம் முகம் மாறியிருக்கும். மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவழிக்கப்படுகிறாதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது; முதலில் குறைக்க வேண்டும், அடுத்து தடுக்க வேண்டும், கடைசியாக ஒழிக்க வேண்டும் நகரத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிராமத்துடன் தொடர்பு உண்டு. கிராமத்தில் இருந்து தான் மக்கள் நகரத்திற்கு வருகிறனர். அனைவரும்கூடி ஒரு கடமையை செய்ய கூடி உள்ளோம். இந்த விளம்பரம் மக்கள் நீதி மய்யத்துக்கான விளம்பரம் அல்ல கிராம சபைகளுக்கான விளம்பரம். கிராம சபை கிராமங்களின் பலம்.இதே தேதியில் இந்த சட்டம் இயற்றி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.
சிலரது அரசியல் அலட்சியத்தால் கிராம சபைகள் முறைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.