அடடா.. இந்த 50 ஆசைகளை வைத்துக் கொண்டு 34 ல் இப்படியா போவது?

Published:

susanth sing

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் 50 ஆசைகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“Kai Po Che” என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இதையடுத்து இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சுயசரிதையில் தோனியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். இவருக்கு வயது 34.

இந்நிலையில் சுசாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றாலும் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை செய்தி கேட்டு சினிமா பிரபங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அவருடைய 50 ஆசைகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

1) விமானத்தை இயக்க கற்றுக்கொள்ள வேண்டும்
2) இடது கையில் கிரிக்கெட் விளையாட வேண்டும்
3) ஒரு சாம்பியனுடன் டென்னிஸ் விளையாட வேண்டும்
4) 1000 செடிகளை நட வேண்டும்.
5) தில்லி பொறியியல் கல்லூரி ஹாஸ்டலில் மாலை நேரம் பொழுதை கழிக்க வேண்டும்
6) புத்தகம் ஒன்றை எழுத வேண்டும்
7) 6 மாதத்தில் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும்
8) காட்டில் ஒரு வாரம் இருக்க வேண்டும்
9) இலவச கல்விக்காக வேலை செய்ய வேண்டும்
10) அன்டார்டிக்காவுக்கு செல்ல வேண்டும்
11) விவசாயம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்
12) குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுக்க வேண்டும்
13) லம்போர்கினி கார் வாங்க வேண்டும்
14) சுவாமி விவேகானந்தர் குறித்த ஆவணப்படம் எடுக்க வேண்டும்
15) யூரோப்புக்கு ரயிலில் செல்ல வேண்டும்

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img