
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் இத்தனை நாட்களில் இதுவே அதிகபட்சம்! தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது! இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று 12ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1000ஐக் கடந்தது.சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,896ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 38 பேர் உயிரிழந்துள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 1,138 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதை அடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,547ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1415 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 178 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 81 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 பேருக்கும் இன்று வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சென்னை மண்டலத்தை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் 15 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் 19 பேருக்கும் அடுத்துள்ள தென்காசி மாவட்டத்தில் 16 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 16 பேருக்கும் அடுத்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பேருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!




