ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.
2012 ஆம் ஆண்டில் அதிகளவாக 627,000 பேர் மலேரியாவ் நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேரியா என்றால் என்ன?
- மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். காய்ச்சல், குளிர் ஜூரம், தலைவலி, உடல் வலி, வாந்தி, குமட்டல், வியர்த்து கொட்டுவது போன்றவை இதன் அறிகுறிகள். நோய் தாக்கிய கிருமியின் வகையைப் பொறுத்தும், எத்தனை நாள் இந்த நோய் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் அதன் அறிகுறிகள் தெரியவரலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் விட்டுவிட்டு தெரியவரலாம்.
மலேரியா எப்படி பரவுகிறது?
- அனாபிளஸ் என்ற ஒருவகை பெண் கொசு கடிக்கும்போது அதில் இருக்கும் ப்ளாஸ்மோடியா என்ற ஒற்றைசெல் கிருமி இரத்தத்தில் கலக்கிறது.
- இந்த கிருமிகள் இரத்தத்தின் வழியாக ஈரலில் இருக்கும் செல்களுக்குள் நுழைகின்றன. அங்கு அவை பல மடங்காக பெருகுகின்றன.
- ஈரலில் இருக்கும் செல் வெடிக்கும்போது இந்த கிருமிகள் வெளியே வருகின்றன. இந்த கிருமிகள் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. அங்கு அவை மேலும் பெருகுகின்றன.
- மலேரியா கிருமி சிவப்பு செல்களுக்குள் நுழைந்து அதை வெடிக்க வைக்கிறது
ஒரு சிவப்பு அணு வெடிக்கும்போது அது கிருமிகளை வெளியிடுகிறது. இந்த கிருமிகள் மேலும் பல சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. - இப்படி இந்த கிருமிகள் பல மடங்காக பெருகுகிறது. ஒவ்வொரு தடவை சிவப்பு அணுக்கள் வெடிக்கும்போதும் மலேரியாவுக்கான அறிகுறிகள் தெரியவருகின்றன.
நம்மை எப்படி பாதுகாப்பது?
- பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கிழிந்திருக்கக் கூடாது.
- மெத்தைக்கு கீழே முழுமையாக நுழைத்திருக்க வேண்டும்.
- பூச்சி மருந்தை வீட்டில் தெளியுங்கள் அல்லது ‘ஸ்பிரே’ செய்யுங்கள்.
- முடிந்தால் ஜன்னலிலும் கதவிலும் கொசு வலையை பொருத்துங்கள். ‘ஃபேன்’ (Fan) அல்லது ‘ஏ.சி’ பயன்படுத்தினால் கொசு வருவது குறையும்.
- வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்துங்கள், உடலை முழுமையாக மூடும் துணிகளை உடுத்துங்கள்.
- கொசு அதிகமாக இருக்கும் இடங்களுக்கு போகாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீருக்கு பக்கத்தில் நிற்காதீர்கள், அங்குதான் கொசு இனப்பெருக்கம் செய்யும்.