‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்த திரைப்படத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகிய நால்வரும் கலந்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் நான்கு முன்னணி நடிகர்களின் கால்ஷீட்டை பெற்று அவர்களை படப்பிடிப்புக்கு வரவழைப்பது என்பது மணிரத்னம் மட்டுமே செய்யக்கூடியது என்று கோலிவுட் திரையுலகம் பாராட்டி வருகிறது.
நால்வரும் இணைந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடைபெறும் இந்த காட்சிகள் படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை வரும் என்றும் கூறப்படுகிறது
அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.