ஐபிஎல் டி20 : தில்லியை 13 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை

csk2 - 2026

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது.

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. சென்னை அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு டு பிளெஸ்ஸி, லுங்கி என்ஜிடி, கே.எம்.ஆசிப், கர்ண் ஷர்மா இடம் பெற்றனர்.

ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஒரு முனையில் டு பிளெஸ்ஸி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய வாட்சன் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 25 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் அரை சதம் அடித்தார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

வாட்சன் – டு பிளெஸ்ஸி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

டு பிளெஸ்ஸி 33 ரன் எடுத்து (33 பந்து, 3 பவுண்டரி) விஜய் ஷங்கர் பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 1 ரன் மட்டுமே எடுத்து மேக்ஸ்வெல் சுழலில் பலியானார்.

வாட்சன் 78 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி மிஷ்ரா பந்துவீச்சில் பிளங்கெட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ராயுடு – கேப்டன் டோனி ஜோடி கடைசி கட்டத்தில் ருத்ரதாண்டவமாட, சிஎஸ்கே ஸ்கோர் வேகம் எக்கச்சக்கமாய் எகிறியது.
இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் டேர்டெவில்ஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

டோனி 31 ரன் எடுத்திருந்தபோது ஆவேஷ் கான் பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை கோலின் மன்றோ வீணடித்தார். ராயுடு 41 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார்.

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. டோனி 51 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), ஜடேஜா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணி பந்துவீச்சில் ஷங்கர், மிஷ்ரா, மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இதைத் தொடர்ந்து, 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டேர்டெவில்ஸ் களமிறங்கியது.

தொடர்ந்து ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்து சென்னை கிங்ஸ் அணியிடம்  13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories