- அமெரிக்க சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை நாடு திரும்பினார்.
தன் மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷ், உதவியாளர் சஞ்சய் ஆகியோருடன் ஏப்., 23ம் தேதி, ரஜினி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு உடல்நல பரிசோதனை செய்ததுடன் அமெரிக்க, கனடா ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்த ரஜினி இன்று மாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வீடு திரும்பிய ரஜினிக்கு, அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார்.