ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோல்வி கண்டால் ராஜஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பட்டு போய்விடும். எனவே ராஜஸ்தான் அணி முந்தைய தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எல்லா வகையிலும் போராடும். பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றம் காண முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறையும், பஞ்சாப் அணி 7 தடவையும் வென்று இருக்கின்றன.