சிபிஎஸ்இக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

சற்றுமுன் விளையாட்டு

04 May 08 sachin - 2026மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய விளையாட்டு வழிமுறைகள் கொள்கைகள் வகுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நாள்தோறும் விளையாட்டு பாட வேளைகள் கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ யின் இந்த நடவடிக்கையை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலுக்கு சச்சின் டெண்டுல்கர் எழுதியுள்ள கடிதத்தில்,, “இந்திய மாணவ, மாணவியரின் வாழ்க்கை முறையால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உடல் பருமனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் இல்லாத நிலையில் உள்ளனர்.இதனால், விளையாட்டில் ஆர்வம் உள்ள பல இளம் தலைமுறையினரை உருவாக்க வேண்டும். விளையாட்டு உடல் வலிமையை மட்டும் உருவாக்குவதில்லை. மன வலிமை மற்றும் ஒழுக்கத்தையும் விளையாட்டு கட்டமைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.