nayan3 - 2026அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கியது. முதல் நாள் சில காமெடி காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இன்று முதல் அஜித் மற்றும் நயன்தாரா கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினக்ரளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்றைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் நயன்தாரா ஐதராபாத் சென்றார். அப்போது விமான நிலைய ஊழியர்கள் நயன்தாராவுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

ஆரம்பம் படத்திற்கு பின்னர் மீண்டும் அஜித்துடன் இணையும் நயன்தாரா இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து தெரிந்து கொள்ளாமலேயே அஜித்துக்காக ஒப்புக்கொண்டதாகவும், இருப்பினும் இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டர் படத்தின் திருப்புமுனை கேரக்டராக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

அஜித், நயன்தாரா ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகள் இன்றுமுதல் படமாக்கப்படவுள்ளாதாகவும்ம், நயன்தாரா சுமார் 15 நாட்கள் ‘விசுவாசம்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending