இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லலாம். ஆனால், ரஜினிகாந்த் இருக்கிறார். ஏனென்றால், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். கமல்ஹாசன் தங்களுக்காக என்ன செய்வார் என மக்கள் கேட்கின்றனர். ஆனால், ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று கேட்கின்றனர். நீங்கள்தான் இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எம்ஜிஆர் தமிழர் இல்லையென்றாலும், தமிழ் மக்கள் அவரை ஆதரித்தனர். சிவாஜி கணேசனை நிராகரித்தனர். அதேபோல, கமல்ஹாசனால் முதல்வராக முடியாது. ஏனென்றால், அவர் பிராமணர். தமிழகத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியாது. தனக்கு சாதியத்தில் நம்பிக்கை இல்லை என்று கமல் சொன்னாலும், மக்கள் அவரைப் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவார்கள் என்றார்.



