விஜய் பாணியில் விஷால்; இரும்புத் திரையை பாஜக.,வினர் ஹிட் ஆக்குவார்களா?!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை தமிழகம்

irumbuthirai4 - 2026

விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்தில்‌ டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரியும் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

விஷால் நடிக்கும் இரும்புத்திரை திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகப் பேசப் படுகிறது. ஏற்கெனவே, விஜய் நடித்த மெர்சல் படம் ஜிஎஸ்டி., டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து தவறான தகவல்களைப் பதிவு செய்திருந்தது. இதனால் பெரும் அமளிதுமளி ஏற்பட்டு, படமும் ஓடி நாளும் கடந்து விட்டது. இந்தப் படத்தை பாஜக.,வினர் எதிர்த்தே விளம்பரம் தேடித் தந்து படத்தை ஓட வைத்தனர்.

இந்நிலையில் விஜய் பாணியில் விஷாலும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து சர்ச்சைக்கிடமான வகையில் காட்சிகள் அமைத்து, பாஜக.,வினர் தயவில் படத்தை ஓடவைப்பார் என்று கிசுகிசுக்கள் களை கட்டியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.