கட்சி தொடங்க நேரம் வந்தால் மக்களின் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
நான் நடித்து முடித்து விட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது. நல்லவனாக இருக்கலாம்; மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கோழை. யார் என்ன சொன்னாலும் நான் என் பாதையில் தொடர்ந்து செல்வேன்.
நானா ஓடுறேன், ரசிகர்களாகிய நீங்கள் ஓட வைக்கிறீர்கள். ஆண்டவன் ஓட வைக்கிறான். யார் என்ன சொன்னாலும் சரி என் ரூட்ல நான் போய்டே இருப்பேன். ஊடகங்கள் எதிர்பார்ப்பு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்யறது. கண்ணா இன்னும் நேரம் வரலை. நேரம் வந்துவிட்டால் மக்கள் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்றார்.



