நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள மேலகரம் கிராமத்திலுள்ள நடுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன் இவர் அப்பகுதியில் டிபன் கடையும் நடத்தி வருகிறார்.
பாபாஜியின் தீவீர பக்தரான இவருக்கு தியானம் செய்யும் பழக்கம் உள்ளது. கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் இவர் தியானம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென உடம்பில் அசைவு ஏற்ப்பட்டது. அப்போது அவரது உடம்பில் காற்றில் பறந்து வந்து சுமார் 10 அடி நீளம் கொண்ட முடி இவர் மீது விழுந்துள்ளது.அவர் தியானம் செய்துகொண்டிருந்தபோது விழுந்த முடி என்பதால் இது பாபாஜியின் முடிதான் என்று கருதி பாத்திரபப்டுத்தி வைத்துள்ளார்,அதன்பின்தான் இந்த முடியை தினமும் பார்த்து வந்துள்ளார்,இந்த முடி பின்னர் ஒரு மாதம் கழித்து பார்க்கும் போது அதிகமான அளவுக்கு இருந்துள்ளதைக்கண்டு அதிசயத்தோடு அளந்து பார்த்தபோது 25 அடியாக வளர்ந்து இருந்ததைக்கண்டு இன்ப வெள்ளத்தில் உள்ளார்.பாபாஜியின் முடிதான் இப்படி வளர்ந்துள்ளது என்று கூறும் இவர் இந்த முடியை பாதுகாத்து வருகிறார்.



