திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 07.05.2018 அன்று துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, கொள்ளையர்களும் பிடிபட்டுள்ளனர்.
ரூ.5.58 லட்சம் பணம் மற்றும் 84 கிராம் தங்க நகைகளை வெள்ளை நிறக்காரில் வந்தவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி கேமராக்களையும் எடுத்துச் சென்றனர்.
காவல்துறையின் விசாரணையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை டி.எம்.பி. வங்கியில் பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த மரியசெல்வம்,ஓட்டுநர் முத்துகுமார், மீரா மைதீன், சுடலைமணி ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு வங்கியில் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிககளில் ஒன்று, ஒரிஜினல் என்றும் மற்றொன்று டூப்ளிகேட் எனவும் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த ரூ.5.58 லட்சத்தில், ரூ.2.58 லட்சம் ரூபாய் பணமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. நகைகள் குறித்து தகவல் கிடைக்கவில்லை. கொள்ளையர்களுக்கு கள்ளத்துப்பாக்கி சப்ளை செய்ததில் தென்மாவட்ட கூலிப்படையினர் ஈடுப்பட்டுள்ளனரா எனவும் காவல்துறை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
திருச்சி மண்டல காவல்துறை ஐஜி வரதராஜலு பேட்டி..
மன்னார்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது. ஒரு துப்பாக்கி, ஒரு போலி துப்பாக்கி, இரண்டு கார்கள் 1 லட்சத்தி 47 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
மணப்பாறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஊழியராக பணிபுரியும் மரிய செல்வம் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார்,சுடலை மணி, மீரான் மைதீன் ஆகிய நான்கு பேர் கைது.



