பெண்களுக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வரும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் லால்குடி பேரூராட்சி, ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் திருச்சி மாவட்ட பேரூராட்சிகளில் பணிபுரியும் பெண்சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மார்பக புற்று நோய் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக நடிகை கௌதமி கலந்துகொண்டு பேசியதாவது:
பெண்களுக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வரும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு நானே முன் உதாரணம்.நம்முடைய சந்தோஷத்தை மற்றவர்களால் கொடுக்க முடியாது. நமது மகிழ்ச்சியை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும்.பெண்களுக்குக்கான பாலியல் வன்மம் காலங்காலமாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.இப்போது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் சம்பவங்கள் உடனே வருவதால் வெளியே தெரிய வருகிறது. அந்த கால கட்டத்தில் இது போன்ற வசதிகள் இல்லாததால் தெரியவில்லை.என்றார்.



