அரியலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம் பந்தபட்டு கைதாகி சிறையில் உள்ள மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையிலடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவு.
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மத்து மடக்கி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் திருமானூர் இரும்புலிக் குறிச்சி பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்தவர்,
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்த மொசையன் (எ) பாலமுருகன் (38) என்பவர் திருட்டு வழிப்பறி போன்ற வழக்கில் கைதானவர்.
தா.பழு.ர் கிராமத்தில் வசித்து வந்த அம்மா தாசன் (எ)நீதி நெப்போலியன் (37) என்பவர் மத்திய மாநில அரசு அதிகாரிகளை மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்து வந்தவர் மேற்கண்ட மூவரை குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி அபிநவ்குமார் மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்ததினையடுத்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சுந்தரராஜன், பால முருகன். நீதிநெப்போலியன் ஆகியோரை ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.



