தூதுத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் வலுப்பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இன்று 100 வது நாள் போரட்டம் ஆகும். இன்று மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இந்நேரத்தில் வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி எம்.எல்.ஏ., கீதாஜீவன் தலைமையில் ஊர்வலம் வந்த சுமார் 200 பேர், நாலாம் கேட் அருகே கைது செய்யப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நாட்டுப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தினர்.இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.




