முதலமைச்சர் அறை முன் 20 க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்புகின்றனர்.
தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையிலான பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை திமுக மற்றும் காங். புறக்கணித்துள்ளது இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,
3 நாட்கள் ஆன நிலையிலும், முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதலும் கூறவில்லை. தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துப்பாக்கிச்சுடு பற்றி நடவடிக்கை எடுக்காமல் ஒப்புக்காக ஆட்சியர், எஸ்.பி., மாற்றப்பட்டுள்ளனர். வழக்கு மட்டும் அல்ல; என்மீது துப்பாக்கிச்சூடு கூட நடத்துங்கள்; எதிர்கொள்ள நான் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



