தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலம் ரத்து செய்துள்ளது. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக நிலம் ஒதுக்கீடு ரத்து என்று சிப்காட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி ஸ்டெர்லைட்டுக்கு சிப்காட் நிர்வாக இயக்குனர் நிலம் ஒதுக்கீடு ரத்து குறித்து அவசர கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.மேலும் ஆலையிடம் இருந்து நிலத்திற்காக பெறப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையால் உடல்நலம் பாதிப்பு என்ற பொதுமக்களின் புகாரை அடுத்து நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணை மூலம் கடந்த 2005, 2006, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிலங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.



