தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மரியாதை இல்லை என்கிறாரா ஸ்டாலின்? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் விவகாரம் சென்றாலும் தமிழக அரசின் நிலைப்பாடு ஆலை மூடல்தான் என்றும் ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க முடியாமல் போனதால் எதிர்க்கட்சிகள் குற்றத்தை தேடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை பற்றிய ஸ்டாலின் புகாருக்கு பதில் அளித்த அவர், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மரியாதை இல்லை என்கிறாரா ஸ்டாலின்? என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



