- எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகத்தான் மாறும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, நிதியுதவி அளித்து, ஆறுதல் தெரிவித்த பின்னர் சென்னைக்கு திரும்பினார் ரஜினிகாந்த்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி போராட்டத்தின்கடைசி கட்டத்தில் உள்ளே புகுந்து கெடுத்தது சமூக விரோதிகள்தான். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும் கடைசி நாள் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தனர்.
அதேபோல ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் உள்புகுந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரை தாக்கிய பின்புதான் பிரச்னையை தொடங்கியது. போலீஸ் உடையில் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றார்.
சமூக விரோதிகள் உள்ளே புகுந்தார்கள் என்பது எப்படி உங்களுக்கு தெரியும் என்ற கேள்விக்கு “ அது எனக்கு தெரியும்என ரஜினி பதிலளித்தார். மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடகாடாகத்தான் மாறும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசினார்.



