தமிழக முதலமைச்சர் மீண்டும் ஜெயலலிதா சிறைக்கு போவார் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு வந்த சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் வருகிற 2016 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும். இதை தேசிய செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்துவேன்.
1½ ஆண்டுகால மோடி ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. அதிமுக, திமுக கட்சிகள் ஊழல்கட்சிகள்.
தமிழ்நாட்டில் இந்து மறு மலர்ச்சி ஏற்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் பாஜக வை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விவாதம் வருகிற 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தொடங்குகிறது. பிப்ரவரியில் தீர்ப்பு வரும்
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும். மீண்டும் தமிழக ஜெயலலிதா சிறைக்குப் போவார் என சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.


