மாவட்ட அளவில் ஹாக்கிக்கான தேர்வு போட்டிகள் இன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்களில் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கான ஹாக்கி விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் சேர விரும்புபவர்களுக்கான தேர்வு போட்டி இன்று காலை எட்டு மணி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு அலுவலகத்தை 04362 – 235633 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



