தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி, சிபிஐ விசாரணை கேட்ட வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெல்ர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு. இதையடுத்து நேற்று தூத்துக்குடி சென்று அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி வழக்கு தொடப்பட்டுள்ளது.



