ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது இல்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதேபோல புதுச்சேரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 15 திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியானது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்ததால் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ரஜினிகாந்த் படங்களுக்கு அதிகாலையிலேயே வந்து ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால் முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் குறைவாக வந்திருந்தனர்.



