எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் அகில இந்திய அளவிலான இளைஞர் பேரணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அமைதி, தூய்மை, யோகா மூலமாக அறநெறியை பேணி காக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ‘எனது பாரதம் பொன்னான பாரதம்’ என்ற தலைப்பிலான இந்த பேரணி 2020-ம் ஆண்டு வரை பேருந்து மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்ட இந்த இயக்கத்தினர் இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு சென்னையின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இதையடுத்து, இன்று காலை சென்னையில் தங்களது பேரணியை துவக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



