serversundaram1 - 2026

சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கிய இயக்கிய ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்சார் சான்றிதழ் ஆகிய பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் ஒருசில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஃப் வேடத்தில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வைபவி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

serversundaram - 2026சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending