ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை செயலி மூலம் அடையாளம் காணப்படுகிறது என ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பொள்ளாச்சியில் தெரிவித்தார்.
ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பு குறித்த ஆய்விற்கு வந்த அவர் பேசுகையில்,
பெண் பயணி பாதுகாப்பிற்காக ரயில்வே பெண்போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு 500 பேர் ரயிலில் அடிபட்டு இறக்கின்றனர். இவர்களில் பலரது அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.
தமிழக போலீசில் புதியசெயலியில் காணாமல் போனவர்களின் தகவல் பதிவு செய்யப்படுகிறது.
தமிழக போலீசுடன், ரயில்வே போலீஸ் இணைந்து ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.



