இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #திருட்டுரயில்திமுக : வெச்சி செய்யும் வலைதளவாசிகள்!

Published:

vaiko stalin karunanidhi - 2026

கோபேக்மேடி, கோபேக்அமித்ஷா ஹேஷ் டேக் போட்டு தேசிய அளவில் பிரசாரம் செய்த திமுக.,வை வகையாக வெச்சி செய்துவருகிறார்கள் வலைத்தளவாசிகள். சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் இவற்றில் இன்றைய டிவிட்டர் ட்ரெண்டாக #திருட்டுரயில்திமுக வை ஆக்கியிருக்கிறார்கள்.   

இப்போதெல்லாம் தேதி குறித்து, திமுக., ஐடி விங்க்குக்கு எதிராகவும், திமுக.வுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தை துவக்கி விடுகிறார்கள். கடந்த தேர்தலின் போது ரூ.200 கொடுத்து சமூக வலைத்தளங்கள், வலைப்பூக்களில் திமுக.,வுக்கு ஆதரவாக கட்டுரைகள், செய்திகள், மீம்ஸ் போடுபவர்களுக்கு கொடுக்கப் படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஆதாரபூர்வமான செய்திக்குப் பின்னர், திமுக.,வை ரூ.200 மீம்ஸ் க்ரியேட்டர் என்று கேலி செய்து வருகிறார்கள் இணையதளங்களில்.

thirutturailthimuka - 2026

இந்நிலையில் இன்றைய ட்ரெண்டாக #திருட்டுரயில்திமுக ஆக்கப் பட்டிருக்கிறது. முன்னமேயே நேரம் கொடுத்து சிலருக்குப் பரப்பப் படும் தகவல்களால் அது பெரிய அளவில் ட்ரெண்ட் ஆக்கப் படுகிறது.  

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

 

திமுக.,வினர் கையாண்ட இந்த உத்தியை இப்போது அந்த ரூ.200கூடப் பெறாமல், பாஜக., ஆதரவாளர்கள் தங்கள் சமூகப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்! இந்த இணையச் சண்டை எங்கு போய் முடியுமோ?

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img