கமலஹாசனின் விஸ்வரூபம் 2 #Vishwaroopam2 படத்தை வெளியிடக் கூடாது என்று தடை கோரி பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பிரமிட் சாய் மீரா நிறுவனம் குறித்து 2009ல் கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் இப்போது வெளியாகியுள்ளது.
மர்மயோகி படத்தை போதிய வசதிகள் இல்லாமல் எடுக்கத் துணிந்து, தடம்புரண்டு போனது பிரமிட் சாய் மீரா நிறுவனம் என்று கூறியுள்ள கமல், ஒரு வருடம் வேறு எதிலும் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டது என்றும், அது கொடுத்த ஒன்றரை கோடிக்கான காசோலை வங்கியில் பணம் இன்றி திரும்பியது.
விசாரித்த போது, பிரமிட் சாய் மீரா நிறுவனம் பணத்தட்டுப்பாடை சொல்லி கைவிரித்தது. இதனாலேயே மர்மயோகி தடைப்பட்டது. இந்த ஒரு வருட காலத்தில் நான் வருமானமாக ரூ.40 கோடி வரை இழக்க நேர்ந்தது. இந்த வருமான இழப்பை ஈடு செய்யும்படி நான் நோட்டீஸ் விடுத்தது அவர்களை திக்குமுக்காடச் செய்தது… – என்று அன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தார் கமல். இதனை இப்போது அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டு, விஸ்வருபம் 2 தடை கோரலுக்கான காரணமாக முன்வைக்கின்றனர்..
2009ல் கமல் வெளியிட்ட அந்த அறிக்கை…






