பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ், ஹசில்வுட் இடம்பெறவில்லை

சற்றுமுன் விளையாட்டு

08 Aug09 Hassal wood - 2026ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த பிறகு தற்போது வரை டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஸ்மித், வார்னர் இல்லாததால் மாற்று வீரர்களை கொண்ட வலுவான அணியை அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் முதுகு வலியில் இருந்து இன்னும் 100 சதவீதம் நிவாரணம் பெறவில்லை என்பதால் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Posts by ரேவ்ஸ்ரீ:

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =