தென்காசியை அடுத்த கீழப்பாவூர் இங்குள்ள பெரிய குளம் 670.1 ஹெக்டேர் பாசன பரப்பு கொண்டது ,குளம் 257.975 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இதன் மூலம் 1937.5 ஏக்கர் நன்செய் நிலமும் 2540 ஏக்கர் புன்செய் நிலங்களும் , மேலும் 71.45 ஏக்கர் பாசனப்பரப்பு கொண்ட தன்னூத்து குளமும் ,116.325 ஏக்கர் பாசனப்பரப்பு கொண்ட கடம்பன்குளம் என இரண்டு குளங்களும் பயன்பெறும் இதன் மூலம் 1724 பண்ணைகுடும்பங்கள் பயன்பெறும் ,உள்ளது இந்தக் குளத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழையால் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து குளம் கொள்ளவை எட்டியது
. இந்த நிலையில் குளக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மடை உள்ளது. இந்த மடையின் அருகே நேற்று முன் தினம் இரவு ஈரப்பதம் அதிகரித்து விரிசல் காரணமாக சிறிய பள்ளம் ஏற்பட்டது அதில் குளத்தில் உள்ள நீர் கசிந்து சென்றது. நேரம் ஆக ஆக இந்த பள்ளம் மிகவும் பெரிதாகியது. இதனால் அருகில் உள்ள கருமடையூர், மூலக்கரையூர் ஆகிய பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக துணை கலெக்டர் விஜயகுமார், தென்காசி கோட்டாச்சித்தலைவர் சுந்தர்ராஜன், ஆலங்குளம் தாசில்தார் அருண்பிரபாகர்செல்வம் ஆகியோர் சரி செய்யும் பணியினை துவக்கினர் ,உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர் வந்து ,கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை பார்வையிட்டு அதை சரி செய்யும் பணியினை துரிதப்படுத்தினார் சம்பவ இடத்தில் , பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்ட ராஜன்,வருவாய்த்துறையினர், அரசு ஒப்பந்தக்காரர்கள் சண்முகவேலு மற்றும் முத்தையாசாமி ஆகியோர் அந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு பள்ளத்தை சரி செய்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல் ஆங்காங்கே சில இடங்களில் அந்த கரைகளில் ஏற்பட்டிருந்த மண் அரிப்பு களையும் மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர்.மேலும் பல இடங்களில் உள்ள மதகுகளை திறந்து விட்டு நீரின் கொள்ளவை குறைத்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டனர்



