சென்னை: தூத்துக்குடி கலவரத்தின் போது காக்கி டிரெஸ் போட்டு, போலீஸ் ட்ரெஸ் போடவே வெட்கமா இருக்கு, கேவலமா இருக்கு என்று பிலிம் காட்டி பிகிலு காட்டினாரே…நினைவிருக்கிறதா? அந்த நடிகை நிலானி உண்மையிலேயே ஒரு பிலிம் காட்டும் பிகிலு பார்ட்டிதான் என்று தெரியவந்துள்ளது.
ஒருவருடன் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயாகி, கருத்து வேறுபாட்டால் கணவனை விட்டுப் பிரிந்து வாழும் நிலானி, உதவி இயகுக்னர் காந்தி லலித் குமாரை காதலித்து வந்தாராம். அவரையே திருமணம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தாராம். அதனால் அவரை உருகி உருகிக் காதலித்து வந்துள்ளார் லலித் குமார்.
ஆனால்.. அந்தோ பரிதாபம்… திடீரென லலித் குமார் மீது, தன்னை கல்யாணம் செய்து கொள் என்று டார்ச்சர் செய்கிறார் என்று நிலானி போலீஸில் புகார் கொடுத்து, டார்ச்சர் செய்ததால் மனம் உடைந்து போனார் லலித் குமார்.
மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் அருகே சினிமா படப்பிடிப்பில் நிலானி இருந்தபோது… லலித் குமார் அங்கே வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போதும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப் படுகிறது.
இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று போலீஸார் அழைக்க, காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிந்து வீடு திரும்பிய நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் லலித் குமார்.
வீட்டுக்கு வந்த லலித் குமார் மனம் உடைந்த நிலையில் திடீரென தீக்குளித்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற இயலாமல், அவர் உயிர் பிரிந்தது.
இதற்கு முன்னதாக, காந்தி லலித் குமார், நிலானியுடன் இருக்கும் வீடியோக்களை சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டார். நிலானியுடன் படுத்திருக்கும் வீடியோ, அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்
நிலானி தன்னை காதலித்து விட்டு அவமரியாதை செய்துவிட்டதால் லலித்குமார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
இதனிடையே லலித்குமார் குடும்பத்தார் அவரது செல்போனில் இருந்த போட்டோ, வீடியோக்களை வெளியிட்டனர். அதில் இருவருமே நெருக்கமாக இருப்பது தெரியவந்தது.
செப்டம்பர் 1ஆம் தேதி நிலானி காலில் மெட்டி அணிவித்து அவரை லலித்குமார் திருமணம் செய்து கொண்டது போன்ற வீடியோ காட்சிகளும் அதில் உள்ளன.
லலித்குமார் தற்கொலை தொடர்பாக நிலானியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து வளசரவாக்கத்திலுள்ள அவர் வீட்டுக்கு இன்று காலை சென்றனர். அப்போது அவரின் 2 குழந்தைகள் மட்டுமே அங்கிருந்த, நிலானி அங்கிருந்து எங்கோ தலைமறைவாகிச் சென்றுவிட்டதாகக் கூறப் பட்டது. அவரது செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
நிலானி மீது இது வரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும், லலித் குமார் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தவே போலீசார் வந்ததாகவும் கூறப்பட்டது.
சீரியல் நடிகை நிலானி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து செய்த களேபரங்களால் அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். அப்போதும் ஒரு மாதத்திற்கும் மேல் தலைமறைவாக இருந்தார், பின்னர் குன்னூரில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.