மது விற்பனைக்கு ஏப்ரல் மாதம் முதல் தடை

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மது விற்பனைக்கு தடை விதிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

1977-78 ஆகிய ஆண்டுகளில் மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்தோம். ஆனால், இது பயனளிக்கவில்லை. ஆனால், பெண்கள் மதுவின் கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே வரும் நிதியாண்டு முதல் மது விற்பனைக்கு தடை விதிக்க கூடிய பணிகளை துவங்க வேண்டும் எனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி மெகா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னதாக, அம்மாநில முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார் நான் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்து இருப்பதால், மாநிலத்தில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.