நடிகர் நெப்போலியன் துணைத் தலைவராகிறார் : தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

திமுக முன்னாள் மத்திய மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரங்களை அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் மாநில துணைத் தலைவராகவும், மக்கள் தமிழகம் கட்சியினை
பாரதீய ஜனதா கட்சியில் இணைத்த புரட்சி கவிதாசன் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் நெப்போலியன் முதலில் திமுக வில் இருந்தார். வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அழகிரியின் ஆதராவாளரான அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் தரப்பட்டது.

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் எழுந்த போது, கட்சியின் நடவடிக்கை பிடிக்காமல் திமுகவிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதுவரை அக்கட்சியில் அவருக்கு எந்த பதவியும் தரப்படவில்லை. தற்போது அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.