பிரபல நடிகர் கார்த்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

 

பிரபல திரைப்பட நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல்,பொன்னுமணி உள்ளிட்ட படங்களில் பிலிம்பேர் விருதுகளையும் வாங்கியுள்ளார். . கலைமாமணி விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் நந்தி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ள அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த வேளையில் திடீரென அரசியலிலும் கடந்த 2006 ஆம் ஆண்டு நுழைந்து அனைத்திந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவரானார்.

இந்த நிலையில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை துவக்கி அதன் தலைவராகவும் உள்ளார் கார்த்திக்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோஹினூர் வைரம் போன்ற குணம் உள்ளவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

நடைபெறவுள்ள 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக்குதிடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்றிரவு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ள்ளார்.

மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சை தீவிர அளித்து வருகின்றனர்.