வளைத்து போடும் ஆசையில் திட்டம் தீட்டி வலம் வரும் நித்யானந்தா

நித்யானந்தாவின் காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடையலாம் என்பது நித்யானந்தா சுவாமியின் தாரக மந்திரம்.

நித்யானந்தாவின் தாரக மந்திரம் ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய் சர்வதேச ஊடகங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் வலம்வந்தவர் நித்தியானந்தா என்றாலும் அது மிகையாகாது.

அது ஒருபுறம் இருக்க பல கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட மதுரை ஆதீனத்தைக் கைப்பற்ற நினைத்த நித்யானந்தாவின் ஆசையும் பெரும் பிரச்சனைகளால்
தவிடு பொடியானது.

மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போகவே காவிரி டெல்டாவில் உள்ள மடங்களைக் கைப்பற்றுவதில் நித்யானந்தா தரப்பு கடந்த சில மாதங்களாக குறியாக இருந்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தற்போது சர்ச்சை சாமியார் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல கோடி ரூபாய் சொத்துகளைக் உடைய இந்து மடங்கள் சாமியார்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் நித்யானந்தாவின் ஆசையால் நிம்மதி இழந்து உயிருக்கு பயந்து மிரண்டு கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்ட த்தை சேர்ந்த ஆத்மானந்தா சுவாமி .சேலம், காரைக்குடியில் சாரதா கல்லூரிகளை இலவசமாக நடத்தி வருகிறார்.

ஆத்மானந்தா சுவாமியின் கட்டுப்பாட்டில் வேதாரண்யம் அருணாசல சுவாமி மடம், கந்தசாமி சாதுக்கள் மடம், திருவாரூர் சோமநாதர் கோயில் ஆகியவை இருக்கின்றன.

அ ந்த மடங்கள் மற்றும் கோவிலுக்குப் பொறுப்பாளாராக ஞானேஸ்வரனாந்தாவை ஆத்மானந்தா நியமித்துள்ளார்.

கல்லூரிகளை நடத்திய வகையில் கடன் ஏற்பட்டு அதில் இருந்து மீள்வதற்கு ஆத்மானந்தா கையை பிசைந்து கொண்டிருந்த போது அவரின் உதவியால் வளர்ந்த நித்யானந்தாவிடம் கடன் கேட்டு ரூ2.15 கோடி கடன்
பெற்றுள்ளார் ஆத்மானந்தா.

இந்த நிலையில் அ ந்த கடனுக்கு பதிலாக ஆத்மானந்தாவின் பொறுப்பில் உள்ள திருவாரூர் கோவில், வேதாரண்யம் மடங்கள், ஆகியவற்றுக்கு தம்மை மடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் நித்யானந்தா நிபந்தனை விதித்திருக்கிறார்.

அதன்படி ஆத்மானந்தாவும் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு பத்திர பதிவுக்குப் போயிருக்கிறார்.. ஆனால் அப்படியெல்லாம் நித்யானந்தாவை மடாதிபதியாக்கிட சட்டத்தில் இடம் இல்லை என்பதால் பெரும் பிரச்சனை கிளம்பியது.

அந்த பிரச்சனையில் காரைக்குடியில் வசித்துவரும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வன்முறையைத் தூண்டி வசூல் வேட்டை நடத்தும் ஒருமுக்கிய பிரமுகர் களம் குதித்தாக கூறப்படுகின்றது

அந்த பிரமுகர் களம் குதித்தால் ரூ2.15 கோடி கடனை திருப்பிக் கொடுக்க ஆத்மானந்தா ஒப்புக் கொண்டிருக்கிறார். இருந்த போதிலும் நித்யானந்தா அதரவாளர்கள் எப்படியும் மடங்களை அபகரித்து விடுவது என்ற நோக்கத்துடன் அவ்வப்போது அந்த மடங்களுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் வேலையை செய்து வருகிறது.

திருவாரூரில் உள்ள சோமநாதர் கோவிலில் தங்கியிருந்த நித்யானந்தாவின் சீடர் ராகவன் எனும் நபர் ஆத்மானந்தாவின்

அதரவாளரான அர்ச்சகர் ராமமூர்த்தியை கழுத்தை நெரித்து படுகொலை செய்ய முயற்சித்த விவகாரம் காவல்
துறையினர் வரை சென்றுள்ளது.

நடைபெற்ற சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஆத்மானந்தா அதரவாளர்கள் திருவாரூரிலும், வேதாரண்ய மடங்களில் இருந்த நித்யானந்தா சீடர்களை அடித்து விரட்டியுள்ளனர் .

கடந்த சிலநாட்களுக்கு முன் தஞ்சாவூரில்உள்ள பால்சாமி சித்தர் மடத்தையும் ஆக்கிரமிக்க முயன்றதால் நித்யானந்தா சீடர்கள் பொதுமக்களால் அடித்து விரட்டினர்.

நித்யானந்தாவின் சாமியார் எனும் போர்வையில் காவி உடைக்குள் ஒளிந்து கொண்டு பல்வேறு சித்து விளையாட்டுகளை நடத்தி பல கோடி ரூபாய் சொத்துகளைக் வளைத்து போடும் ஆசையில் திட்டம் தீட்டி வலம் நித்யானந்தா வருதாக பரவலாக கூறப்படுகின்றது.