ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டு விழாவில் பேசிய படம் வைரலாகிவருகிறது.
ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி (வயது 46) முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று விஜயவாடாவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று கொண்டார். அவரைத் தொடர்ந்து, வரும் ஜூன் 6 ஆம் தேதி மற்ற அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு அறிவித்திருந்தார். அவருக்கு பதில் அவரது கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஸ்டாலின் கலந்து கொண்ட படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டு, முகம் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக, கோயில்களில் கொடுக்கப் பட்ட குங்குமப் பிரசாதங்களை நெற்றியில் இருந்து அழித்து விட்ட ஸ்டாலின், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வைக்கப்பட்ட குங்குமப் பொட்டை இட்டுக் கொண்டிருந்தார். தற்போது தமிழகத்துக்கு வெளியே ரெட்டியின் பதவி ஏற்பில் இவ்வாறு காட்சி தருகிறார்.





தான௠அழிதà¯à®¤à¯à®•à¯à®•ொளà¯à®³à¯à®µà®¤à¯ போல தன௠வீடà¯à®Ÿà®¾à®°à¯à®•ளையà¯à®®à¯ கà¯à®™à¯à®•à¯à®®à®¤à¯à®¤à¯ˆ அழிகà¯à®• செயà¯à®¤à®¾à®²à¯, உணà¯à®®à¯ˆà®¯à®¿à®²à¯‡à®¯à¯‡ மூட நமà¯à®ªà®¿à®•à¯à®•ையோ கடவà¯à®³à¯ நமà¯à®ªà®¿à®•à¯à®•ையோ இலà¯à®²à®¾à®¤à®µà®°à¯ எனà¯à®±à¯ கொளà¯à®³à®²à®¾à®®à¯. வீடà¯à®Ÿà¯à®•à¯à®•௠உளà¯à®³à¯‡ ஒர௠கொளà¯à®•ை. வெளியில௠மகà¯à®•ளà¯à®•à¯à®•௠இனà¯à®©à¯Šà®°à¯ கொளà¯à®•ையா?